எச்.ஐ.வி.தொற்றுக்கு மருந்து கண்டுபிடிப்பு!

Thursday, October 6th, 2016

 

எச்.ஐ.வி எனப்படும் ஆபத்தான உயிர்கொல்லி நோய்க்கு மருந்துகள் வந்துவிட்டது என்று சொன்னால் உங்களால் நம்பமுடிகிறதா?

ஆம். உண்மைதான். எச்.ஐ.வி.யை முழுவதுமாக குணப்படுத்த நம் ஆராய்ச்சியாளர்கள் முழு முயற்சியில் இறங்கி விட்டனர். ஐந்து பிரித்தானிய பல்கலைக்கழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு டாக்டர் குழு எச்.ஐ.வி. செல்கள் அனைத்துடனும் மருத்துவ பரிசோதனை செய்யத் தொடங்கியது.

பிரித்தானிய பல்கலைக்கழகத்தில் இருக்கும் இந்த டாக்டர் குழு தற்போது நடத்தியுள்ள தங்களது ஆராய்ச்சியில் எச்.ஐ.வி. என்ற இந்த கொடிய உயிர்கொல்லி நோய்க்கு மருந்து கண்டுபிடித்துள்ளனர். 44 வயது மதிக்கத்தக்க இங்கிலாந்து நாட்டை சேர்ந்த எச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட அந்த மனிதரின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட செல்களின் மாதிரிகளுக்கு தொடர்ந்து பற்பல சிகிச்சைகள் கொடுக்கப்பட்டுள்ளது.

அப்படி செய்யப்பட்ட ஆராய்ச்சிகள் சிறந்த பலனைத் தந்துள்ளது. ஆராய்ச்சிகள் மற்றும் சிகிச்சைகள் பலவற்றுக்கும் பிறகு நடந்த இறுதி பரிசோதனையில் எடுக்கப்பட்ட மாதிரி முற்றிலும் வைரஸ் சாதாரணமாக இருப்பது தெரியவந்துள்ளது.

எய்ட்ஸ் எப்படி பரவுகிறது தெரியுமா?எயிட்ஸை உண்டாக்கும் எச்.ஐ.வி. வைரஸ் மனித உடலின் T-ஹெல்பர் செல்களை தாக்குகிறது. இந்த செல்கள்தான் முக்கியமாக தாக்கப்படுகிறது.

எச்.ஐ.வி. தொற்றும் செல்கள் அனைத்தும் அவற்றின் தாக்கத்தால் அழிக்கப்பட்டு விடுகிறது. அழிக்கப்பட்ட பின் வெளியேறும் செல்கள் அடுத்து நல்ல நிலையில் இருக்கும் செல்களை தாக்க ஆரம்பிக்கின்றது.

வெகு சீக்கிரமாக நடக்கும் இந்த தாக்கம் மொத்த செல்களையும் அழித்து விடுகிறது. என்ன வித்தியாசம் இந்த தெரபியில்?

இந்த புது வகை தெரபி, பழைய கோட்பாடுகளில் இருந்து மாறுபட்டுள்ளது. எப்படி என்கின்றீர்களா? இது வரை உருவாக்கப்பட்ட கோட்பாட்டுகளின் கூற்றுப்படி, ANTI-RETROVIAL DRUGS என்ற மருந்து வகை மூலம் சிகிச்சை செய்யப்படுகிறது. இந்த மருந்துகள், இரத்தத்தில் கலந்துள்ள வைரசின் எண்ணிக்கையைக் குறைப்பதுடன் அவை பரவுவதை கட்டுப்படுத்துகிறது. கட்டுப்படுத்துவதோடு அதன் வேலை முடிந்துவிடுகிறது.

ஆனால், இந்த புதிய வகை தெரபி நேராக T-செல்களை பாதிக்கச் செய்கிறது. T-செல்கள் என்பது எச்.ஐ.வி. உருவாக்கும் ஒரு வகை செல்.இந்த புது சிகிச்சை, எச்.ஐ.வி யால் பாதிக்கப்பட்டு இருக்கும் செல் வகைகளை மட்டுமே அழித்து விடுகிறதாம்

உயிரற்ற நிலையில் எச்.ஐ.வி. தாக்காமல் இருக்கும் செல்களுக்கு எவ்வித பாதிப்பும் தருவதில்லை என்று கூறுகிறார்கள்.சிகிச்சையில் இதுதான் நடக்கிறதாம்: இன்னும் தெளிவாக கூற வேண்டுமென்றால், இந்த சிகிச்சை இரண்டு விதமான படிமுறைகளில் செயல்படுகிறது. மருந்து உள்ளே செலுத்தப்பட்டவுடன், அதன் முதல் வேலை எச்.ஐ.வி. நோயினை கண்டறிவதுதான். எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட செல்களை கண்டறிந்த பிறகு, அடுத்த கட்ட நடவடிக்கையாக தனது ஆதிக்கத்திறனை செயல்படுத்த தொடங்கி விடும்.

எச்.ஐ.வி.யை உருவாக்கும் வாரினோஸ்டட் எனப்படும் பாதிக்கப்பட்ட T-செல் (வேலை செய்யாமல் சும்மாவே இருக்கும்) செல்களை செயல்பட தூண்டுகிறது. இவ்வாறு செயல்படாமல் இருக்கும் செல் வகைகளை தூண்டுவதன் மூலம், அவற்றின் உள்ளே இருக்கும் எச்.ஐ.வி. வைரஸ் மேலும் உருவாகாமல் தடுப்பதோடு இல்லாமல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறதாம். அதுதான் நோயை குணப்படுத்துவதாக கூறுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

பில்டர் என்ற ஆராய்ச்சியாளர் கூறும்போது, இதற்காக ஆராய்ச்சியாளர்கள் தங்களது ஆராய்ச்சியில் வெகு தூரம் பயணப்பட்டிருப்பதாகவும், எனிலும், தங்களது இந்த கண்டுபிடிப்பினை, இன்னும் தொடர்ந்து 5 வருடங்கள் இந்த ஆராய்ச்சியை தொடரப் போவதாக கூறியுள்ளனர்.தற்போதைக்கு கிடைத்துள்ள இந்த ஆராய்ச்சி முடிவுகளை மேலும் பல சோதனைகளுக்கு உட்படுத்த வேண்டியுள்ளது.

அவ்வகையில், வருங்காலத்தில் வரும் முடிவுகள் இதேபோல சிறந்த முடிவாக வரும் பட்சத்தில், நிச்சயம் இதனை நாங்கள் மேலும் ஆராய்ச்சி பண்ணுவோம் என்கிறார்.ஆக, தற்போது கிடைத்துள்ள இந்த வைரஸ் ஃப்ரீ எச்.ஐ.வி. மாதிரியின் வெற்றி ஒரு முடிவின் தொடக்கம் தான்.இதன் பரிசோதனை முடிவுகள் ஆரம்ப நிலையில் தான் இருக்கிறது. ஆனால் எச்.ஐ.வி நோய்க்கு கண்டிப்பாக ஒரு தீர்வு கிடைக்கும் என உறுதியாக நம்புகிறார்கள் மருத்துவர்கள்.

97-735x400

Related posts: