உலகம் பிளாஸ்டிக் மயமாகிறது – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் !

Thursday, July 20th, 2017

உலகம் பிளாஸ்டிக் பூமியாக மாறி வருவதாக அமெரிக்காவின் விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

புதிய கணிப்பீட்டின் படி உலகில் 8.3 பில்லியன் டன்கள் எடைகொண்ட பிளாஸ்டிக்கள் உள்ளன. இவை கடந்த 65 வருடங்களில் மாத்திரம் உருவாக்கப்பட்டவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவற்றின் பாதி அளவானவை கடந்த 13 வருடங்களில் உருவாக்கப்பட்டவையாகும்.

உலகெங்கும் உள்ள பிளாஸ்டிக் பொருட்களின் எடையானது, ஒரு பில்லியன் யானைகளின் நிறைக்கு அல்லது அமெரிக்காவில் உள்ள 25 ஆயிரம் அரச கட்டிடங்களின் எடைக்கு நிகரானதாகும் குறுங்காலத் தேவைக்காக பயன்படுத்தப்படுகின்ற பிளாஸ்டிக்களான பொதியிடல் அட்டைகள் போன்றனவே தற்போது உலகத்துக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்துவதாக உள்ளது

உற்பத்தி செய்யப்பட்டுள்ள பொலித்தீன்களில் 70 சதவீதமானவை தற்போது கழிவுகளாக மாறியுள்ளதுடன், இவை உலக நிலப்பரப்பு மற்றும் கடற்பரப்பில் பாரிய அளவான பகுதியை ஆக்கிரமித்துள்ளன

கழிவுப்பொருட்களாக மாறுகின்ற பிளாஸ்டிக்களில் 9 சதவீதமானவையே மீள்சுழற்சிக்கு உள்ளாக்கப்படுகின்றன. 12 சதவீதமான பிளாஸ்டிக் எரியூட்டப்படுகின்ற போதும், 79 சதவீதமானவை நிலத்தில் அல்லது கடலில் கொட்டப்படுகின்றன

தற்போதைய இந்த நிலைமை நீடிக்கும் பட்சத்தில், 2050ம் ஆண்டாகும் போது, உலகெங்கும் 12 பில்லியன் எடைகொண்ட பிளாஸ்டிக் சேர்ந்திருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

உலகம் முழுமையாக பிளாஸ்டிக் பூமியாக மாறுவதற்கு முன்னர், பிளாஸ்டிக் உள்ளிட்ட சில பொருட்களின் பயன்பாட்டை தக்கவகையில் பேண பழகிக் கொள்ள வேண்டும் என்று விஞ்ஞானிகளால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts: