உருக்கை விடவும் ஐந்து மடங்கு பலம்வாய்ந்த பதார்த்தம் கண்டுபிடிப்பு!

Monday, March 6th, 2017

பலம் வாய்ந்ததாகவும், துருப்பிடிக்காமலும் இருப்பதற்கு அன்றாட வாழ்வில் கலப்புலோகமான உருக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. ஆனால் இந்த உருக்கினைப் போன்று ஐந்து மடங்குகள் பலம் வாய்ந்த திரவவியில் களி ஃபப்ரிக் (Hydrogel Fabric) பதார்த்தம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இவற்றினை உடைக்க வேண்டும் எனில் காபனேற்றப்பட்ட உருக்கினை விடவும் ஐந்து மடங்கு சக்தி வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இதனை இலகுவாக வளைக்க முடிவதுடன் நீட்சிக்கு உட்படுத்தவும் முடியும் என்பது விசேட அம்சமாகும். இப் பதார்த்தமானது முற்று முழுதாக செயற்கையான முறையில் தசை நார்கள் மற்றும் தசை நாண்கள் என்பனவற்றினை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.

இதனை ஜப்பானில் உள்ள Hokkaido பல்கலைக்கழக ஆராய்ச்சிளார்களே உருவாக்கியுள்ளனர். இதில் உள்ள திரவக் களிக்கும், ஃபப்ரிக் பதார்த்தத்திற்கும் இடையில் இரும்பு பிணைப்பு காணப்படுவதே இந்த உறுதிக்கு காரணம் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Related posts: