இந்தியாவில் ஐபோன்களின் விலையை குறைத்தது அப்பிள் நிறுவனம்!
Thursday, September 15th, 2016
இந்தியாவில் ஐபோன்களின் விற்பனை மந்தமாக உள்ளதால் ஐ போன் 6 எஸ் (iPhone 6s) மற்றும் ஐ போன் 6 எஸ் பிளஸ் (iPhone 6s plus) ஆகியவற்றின் விலையை 22 ஆயிரம் இந்திய ரூபா வரை அப்பிள் நிறுவனம் குறைத்துள்ளது.
இந்த விலை குறைப்பு மூலம் 82,000 ஆயிரம் இந்திய ரூபா விலையுள்ள ஐ போன் 6 எஸ் இனை 60,000 இந்திய ரூபாவிற்கு இந்தியாவில் வாங்க முடியும்.
இதேபோல், 22,000 இந்திய ரூபாவிற்கு விற்கப்பட்ட ஐபோன் 6 எஸ் பிளஸ், 70,000 இந்திய ரூபாவிற்கு விற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட அப்பிள் நிறுவனத்தின் மற்றொரு தயாரிப்பான 4-இன்ச் ஐ போன் SE போன்களின் விலையையும் அப்பிள் நிறுவனம் குறைத்துள்ளது.
49,000 விலையுள்ள இந்த போன் இனி 44,000 இந்திய ரூபாவிற்கு விற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விலைக்குறைப்பு புதிதாக அப்பிள் போன் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கக்கூடும் என நம்பப்படுகிறது

Related posts:
|
|
|


