ஆண்டின் இறுதி பௌர்ணமியில் பூத்த அரியவகை மலர்!

அநுராதபுரம் – மஹாமெலுனா பகுதி விகாரைக்கு அருகில் அரியவகை மலர் ஒன்று பாரிய அளவில் மலர்ந்துள்ளது. இந்த மலர் சிங்களத்தில் “கடுபுல் மலர்” என அழைக்கப்படுகின்றது, இதனால் அந்தப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளதாகவும் அறியமுடிகின்றது.
பௌர்ணமி தினத்தன்று இந்த மலர் மலர்ந்துள்ளதாகவும், அனைவரும் இதை நாடி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த வருடத்தின் இறுதி பௌர்ணமி தினத்தில் பூஜை வழிப்பாடுகளில் கலந்துக் கொள்ள வந்தவர்களுக்கு இந்த அரிய வகை மலரை காண முடிந்துள்ளது.
அங்குள்ள பிக்குகள் அந்த மலர்களை பரித்து பூஜை வழிப்பாடுகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இரவில் மலர்ந்து வாசனை கொடுத்து விட்டு, இரவு நேரத்திலேயே வாடிப்போகும் அரிய வகை மலர் இதுவாகும்.
Related posts:
வரும் 14ஆம் திகதி வானில் அதிசயம்!
2016 கடைசி இரவோடு இன்ரர் நெட் பாதிக்குமா?
மூளையை ஸ்கான் செய்து இறுதியாகக் கேட்ட பாடலை தெரிந்துகொள்ளலாம்!
|
|