மூளையை ஸ்கான் செய்து இறுதியாகக் கேட்ட பாடலை தெரிந்துகொள்ளலாம்!

Wednesday, February 14th, 2018

மனித மூளையில் உள்ள விடயங்களை அறிந்துகொள்வதற்கான ஆராய்ச்சிகள் தொடர்ச்சியாக இடம்பெற்ற வண்ணம் உள்ளன.

இவற்றின் மூலம் ஒருவருடைய எண்ணங்களை அறிந்துகொள்ள முடிவதுடன், குற்றவாளிகளை கண்டுபிடிக்கக்கூடியதாகவும் இருக்கும்.

தற்போது ஒருவர் இறுதியாக கேட்ட பாடல் என்ன என்பதை அறிந்துகொள்வதற்கான ஸ்கானிங் தொழில்நுட்பம் ஒன்றினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

fMRI ஸ்கான் ஊடாக மூளையை வெவ்வேறு கோணங்களில் ஸ்கான் செய்து இரத்த ஒழுக்கு மற்றும் மூளையின் செயற்பாடு என்பவற்றினை தெரிந்துகொள்ள முடியும்.

இவ் ஆய்வானது எதிர்காலத்தில் மக்களின் மனத்திலுள்ள விடயங்களை அறிந்துகொள்ள முன்னோடியாக இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்விற்காக ஆறு பேர் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன் 40 வகையான பாடல்கள் ஒலிக்கச் செய்யப்பட்டுள்ளது.

625.0.560.350.160.300.053.800.668.160.90

Related posts: