அப்பிள் நிறுவனம் முதலிடம் !
Sunday, November 19th, 2017
அணியக்கூடிய சாதனங்களுக்கான சந்தையில் அப்பிள் நிறுவனம் இவ்வாண்டும் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.
சீன நிறுவனம் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. அப்பிள் நிறுவனம் இவ்ஆண்டில் மொத்தமாக 39 இலட்சம் சாதனங்களை விற்பனை செய்துள்ளது. விற்பனை அதிகரிப்புக்குக்கு LTE வசதி கொண்ட அப்பிள் மணிக்கூடே முக்கிய காரணமாக அமைந்தது என கூறப்படுகிறது.
இந்நிறுவனத்தைத் அடுத்து சியோமி மற்றும் ஃபிட்பிட் உள்ளிட்ட நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.சியோமி நிறுவனம் (Seomi Company) சுமார் 36 இலட்சம் சாதனங்களையும், ஃபிட்பிட் நிறுவனம்(Fibbit company) 35 இலட்சம் சாதனங்களையும் விற்பனைசெய்துள்ளன.
ஸ்மார்ட் மணிக்கூடு விற்பனை அதிகரித்திருந்தாலும், ஒட்டுமொத்த சந்தையில் அணியக்கூடிய சாதனங்களின் விற்பனை, இரண்டு சதவிகித சரிவைசந்தித்துள்ளது. கனாலிஸ் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, அப்பிள் நிறுவனம் 8 இலட்சம் அப்பிள் மணிக்கூடு சாதனங்களை இந்த ஆண்டின் மூன்றாவதுகாலாண்டில் விற்பனை செய்திருக்கலாம் என தெரிவித்திருந்தது.
இருப்பினும் இவ்வாண்டின் நான்காவது காலாண்டில் விற்பனை மேலும் அதிகரிக்கும் என சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
Related posts:
|
|
|


