அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள105 வயது மூதாட்டியின் செவ்வி!

அமெரிக்காவில் வசித்து வரும் 105 வயதுடைய மூதாட்டி ஒருவர் ஊடகத்திற்கு வழங்கியுள்ள செவ்வி பலரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியுள்ளது.
குறித்த மூதாட்டி நான் புகைப்பிடிப்பேன், மது அருந்துவேன் என்று கூறியிருப்பதே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது உள்ள உலகில் தொடர்ந்து மது அருந்தினாலோ, புகைப்பிடித்தாலோ அவரின் ஆயுட்காலம் குறைந்துவிடும் என்று மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.
ஆனால் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் Palm Harbor பகுதியில் வசித்து வரும் Helen Granier என்ற மூதாட்டி கடந்த வெள்ளிக் கிழமை தன்னுடைய 105-வது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நான் இத்தனை ஆண்டுகள் இருப்பேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. என்னுடைய கடந்த காலங்களை நினைத்து பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது.
பியர் குடிப்பேன், புகைப்பிடிப்பேன், வீட்டிற்கு தாமதாக வருவேன் என்று புன்னகையுடன் கூறியுள்ளார்.
அது மாத்திரமின்றி சூதாட்டத்தின் மீது தான் கொண்ட அதீத ஆசையால் அமெரிக்காவின் Las Vegas பகுதிக்கு செல்ல வேண்டும் என்பது தன்னுடைய விருப்பங்களில் ஒன்றெனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் என் கணவர் அதற்கு தடையாக இருந்ததால் என்னால் செல்ல முடியவில்லை. ஆனால் அவர் இறந்த பின்பு Las Vegas க்கு சென்றேன். என் ஆசையை நிறைவேற்றிக் கொண்டேன்.
அத்துடன் முதலாவது உலகப்போர் நடைபெற்றமை தொடர்பில் சிறிதளவு நினைவிருக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|