அதிநவீன வசதிகளுடன் இன்டர்நெட் ரவுட்டர் அறிமுகம்!
Sunday, February 12th, 2017
இணைய சேவையை பெற்றுக்கொள்வதற்கு உதவும் ரவுட்டர்கள் பெரும்பாலும் பாதுகாப்பு அற்றவையாகவே காணப்படும். குறித்த பாதுகாப்பு குறைபாட்டினை சாதகமாகப் பயன்படுத்தி ஹேக்கர்கள் தமது கைவரிசையைக் காட்டிவிட்டுச் சென்று விடுவார்கள்.
இதன் காரணமாக ரவுட்டர்களில் அதிக பாதுகாப்பு ஏற்பாடுகளை உள்ளடக்கும் முயற்சியில் பல்வேறு நிறுவனங்களும் ஈடுபட்டு வருகின்றன.
இம் முயற்சியின் பயனாக தற்போது Flter எனும் புதிய ரவுட்டர் உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் VPN பாதுகாப்பு, தீங்கிழைக்கும் செயற்பாடுகளை தடுத்தல், இணையத்தளங்களை தடை செய்வதை தடுத்தல் போன்ற பாதுகாப்பு சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும்.
மேலும் அனைத்து வகையான சாதனங்களையும் இதனுடன் இணைத்து பயன்படுத்த முடியும். தற்போது இச் சாதனத்தினை உருவாக்கிய குழு 50,000 டொலர்கள் நிதி சேகரிப்பதற்காக Kickstarter தளத்தில் விளம்பரம் செய்துள்ளது.
80 டொலர்கள் வரை பெறுமதி உடையதாக இருக்கும் எனக் கருதப்படும் இச் சாதனம் எதிர்வரும் ஜுன் மாதமளவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts:
|
|
|


