அட்டகாசமான வடிவமைப்புடன் மோர்ட்ரோலா கைப்பேசிகள் அறிமுகம்!

Monday, June 13th, 2016

முன்னணி ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனமான மோர்ட்டோலா ஆனது Moto Z மற்றும் Moto Z Force எனும் இரு கைப்பேசிகளை அறிமுகம் செய்யவுள்ளது.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் அறிமுகம் செய்யப்படவுள்ள இக் கைப்பேசிகள் கறுப்பு, கோல்ட் மற்றும் ரோஸ் கோல்ட் ஆகிய நிறங்களில் கிடைக்கப்பெறும்.

எனினும் துரதிர்ஷ்ட வசமாக கனடாவில் கறுப்பு நிறத்தினாலான கைப்பேசிகள் மட்டுமே அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இதில் Moto Z கைப்பேசியானது 5.5 அங்குல அளவு, 2560 x 1440 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

தவிர Snapdragon 820 Processor, பிரதான நினைவகமாக 4GB RAM என்பனவற்றுடன் 32/64GB சேமிப்பு நினைவகமும் தரப்பட்டுள்ளது.

மேலும் 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா, 2,600 mAh மின்கலம், Android 6.0 Marshmallow என்பவற்றினையும் கொண்டுள்ளது.

Related posts: