உலகில் மிகப் பெரிய வைரக்கலை ஏலத்தில் விற்க முடியவில்லை!
Thursday, June 30th, 2016
லண்டனில் நேற்று நடைபெற்ற ஏல விற்பனையில் உலகில் மிகப் பெரிய வைரக்கல்லை விற்பனை செய்ய முடியாது போயுள்ளது. உலகிலேயே மிகப் பெரிய வைரக்கல் என கருதப்படும் லாரோனா என்று பெயரிடப்பட்டுள்ள வைரக்கல் லண்டனில் நேற்று ஏலம் விடப்பட்டது.
ஏல விற்பனையில் வைரக்கல்லுக்கு அதிகபட்ச விலையை பெற முடியாத காரணத்தினால், அதனை விற்பனை செய்ய முடியாது போயுள்ளது.
போஸ்வானா நாட்டில் கடந்த நவம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரக்கல் ஆயிரத்து 109 கரட் எடை கொண்டது. இந்த வைரக்கல் 2.5 பில்லியன் ஆண்டுகள் பழமையானது எனவும் கூறப்படுகிறது.
இதனை 70 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் ஏலத்தில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் 61 மில்லியன் அமெரிக்க டொலருக்கே ஏலம் கோரப்பட்டதாக தெரியவருகிறது.
Related posts:
கடமை நேரத்தில் பேஸ்புக் பயன்படுத்தும் அரச ஊழியர்களுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை?
நாசாவின் அடுத்த விண்கலம் தொடர்பில் புதிய தகவல்!
உலகையே திரும்பி பார்க்கவைத்த ஸ்டீபன் ஹாக்கிங் மறைவு உலகுக்கு பெரும் இழப்பு!
|
|
|


