அடுத்த ஏழாண்டு காலத்திற்குள் நிலாவில் மனிதர்கள் குடியமர்வு – நாசா

Wednesday, March 30th, 2016

வரும் ஏழாண்டு காலத்திற்குள் மனிதர்களை நிலாவில் குடியமர்த்தும் முயற்சிகள் வெற்றிபெறும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மனிதர்களை குடியேற்றுவதற்கான முயற்சிகள் பல ஆண்டுகளாக நடந்துவருகின்றன.

இந்த முயற்சி சாத்தியமானால், மனித சமுதாயத்தின் உச்சக்கட்ட சாதனையாக விளங்கும். இதற்கான ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

இந்நிலையில், அடுத்த ஐந்து அல்லது ஏழு ஆண்டுகளில் நிலாவில் மனிதர்கள் வசிப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு மைய மான நாசாவை சேர்ந்த விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

எதிர்வரும் 2020 ஆம் ஆண்டுக்குள் 10 பேர் வரை தங்கக்கூடிய வகையில் நிலாவில் தளம் அமைக்கும் சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இதற்கு 10 பில்லியன் டாலர்கள் வரை செலவாகும் என்று கூறப்படுகிறது. இந்த தொகையானது, மேற்படி திட்டத்துக்காக முன்னர் மதிப்பிடப் பட்டிருந்த செலவு தொகையைவிட குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பிய நாடுகள், சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் செவ்வாய்க் கிரகத்தில் தளம் அமைப்பது தொடர்பான தங்களது விருப்பத்தை தெரி வித்துள்ளன. அதற்கு முன்னதாகவே, நிலாவில் மனிதர்கள் வசிப்பதற்காக தளத்தை அமைக்கும் சவாலை அமெரிக்கா எதிர்கொண்டுள்ளது.

Related posts: