ஐ.பி.எல் ஏலத்தில் Facebook , Twitter  ஏட்டிக்கு போட்டி!

Wednesday, October 19th, 2016

ஐ.பி.எல்  ஏலத்திற்கான பந்தயத்தில்  சமூக வலைதளங்களின் அதிகளவு ஆதிக்கம் செலுத்தும்  வலையத்தளமாக பேஸ்புக்கும்  களமிறங்கியுள்ளது.

இந்தியாவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் இருபதுக்கு 20 தொடரான இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளின் ஒளிபரப்பு உரிமத்துக்கான ஏலம் விரைவில் நடைபெற உள்ளது.  இதற்கான கொள்கைகளை, தொலைக்காட்சி ஒளிபரப்பாளர்களுக்கு சாதகமாக பி.சி.சி.ஐ சமீபத்தில் மாற்றியமைத்துள்ளது.இந்திய கிரிக்கெட் சங்கத்தின்  செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என லோதா சபையின்  ஆலோசனைப்படி, ஐ.பி.எல்  ஒளிபரப்பு உரிமம், ஏலம் மூலம் முதல் முறையாக விரைவில் நடக்கவுள்ளது.

இந்தியாவில் மிக பிரபல்யமான ஐ.பி.எல் போட்டியில் ஒளிபரப்பு உரிமத்தை எடுத்தால் லாபத்தை குவிக்கலாம் என்பதால், ஐ.பி.எல் ஒளிபரப்பு உரிமத்தை எடுப்பதற்கு இந்த ஆண்டு கடுமையான போட்டி நிலவும் என்று கருதப்படுகிறது.

இந்த ஏலத்தில் கலந்து கொள்ள கடைசி நாள் வரும் 25ம் திகதி வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் ஐ.பி.எல் ஒளிபரப்பு ஏலத்தில் பேஸ்புக் நிறுவனமும், ட்விட்டர் நிறுவனமும் களமிறங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.ஆனால் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடதகக்து.

1-63

Related posts: