QR முறைமைக்கு சுமார் 50 இலட்சம் வாகனங்கள் பதிவு – எரிசக்தி அமைச்சு விடுத்த அறிக்கையில் தெரிவிப்பு!
Tuesday, August 2nd, 2022
நாட்டில் எரிபொருள் விநியோக நடவடிக்கைக்காக அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய எரிபொருள் அட்டையூடான கியூ.ஆர் முறைமைக்கு சுமார் 50 இலட்சம் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வலுசக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்ட இணையதளத்தினூடாக மாத்திரம் பதிவு செய்யுமாறும் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில் நுட்ப திணைக்களம் பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
கியூ.ஆர். குறியீட்டின் மூலம் எரிபொருளை விநியோகிக்கும் நடைமுறை நேற்று (01) முதல் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இளைஞர் விவகார அமைச்சு சுகததாச விளையாட்டு வளாகத்திற்கு மாற்றம் – அமைச்சர் நாமல் ராஜபக்ஸ நடவடிக்கை!
அனைத்து வீதிகளினதும் தரம் தொடர்பில் ஆராய விசேட பிரிவு ஸ்தாபிக்க நடவடிக்கை - அமைச்சர் திலும் அமுனுகம ...
பொருளாதார வளர்ச்சியை கவனத்தில் கொண்டு அரச ஊழியர்களின் சம்பளத் திருத்தம் குறித்து தீர்மானிக்க முடியும...
|
|
|


