O/L பரீட்சாத்திகள் மோசடிகள் செய்திருப்பின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்படும்!
Saturday, December 23rd, 2017
கடந்த 12ஆம் திகதியன்று நாடளாவிய ரீதியில் ஆரம்பமான க.பொ. த. சாதாரண தரப் பரீட்சைகள் நிறைவடைந்துள்ள நிலையில் குழப்பங்களை ஏற்படுத்தும் வகையில்பரீட்சார்த்திகள் யாராவது ஈடுபட்டிருந்தால் அவர்களின் பெறுபேறுகள் இடைநிறுத்தி வைக்கப்படுமென பரீட்சைகள் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும் இந்தப் பரீட்சையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் முழுமையான விசாரணைகள் நடத்தப்படுமென்று பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் சனத்பூஜித தெரிவித்துள்ளார்.
Related posts:
பிரித்தானிய அரசாங்கம் நிதியுதவி!
அரசியல் பழிவாங்கல் முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகள் நிறைவு - இதுவரை 1842 முறைப்பாடுகள் கிடைத்துள்ளத...
கிழக்குத் திமோர் அரசுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்த அமைச்சவை அங்கீகாரம்!
|
|
|


