Dialog சேவை வாடிக்கையாளர்களுக்கு வாய்ப்பு!
Saturday, September 23rd, 2017
இலங்கையில் கடந்த 20ஆம் திகதி சில மணி நேரம் பாதிக்கப்பட்டிருந்த Dialog சேவையால் வாடிக்கையாளர்கள் பெரும் அசௌகரியத்தை எதிர்கொண்டிருந்தனர். இதனைக் கருத்திற் கொண்ட Dialog நிறுவனம் அன்றையதின கட்டணங்களை அறவிடாதிருக்க முடிவுசெய்துள்ளது.
இதன்படி 20ஆம் திகதிக்கான நாளுக்கான உள்நாட்டு, சர்வதேச மற்றும் குறுந்தகவல் (local, IDD, roaming, SMS) சேவைக்கான கட்டணத்தை வாடிக்கையாளர்களிடம் அறவிடாதிருக்க தீர்மானித்துள்ளது. அதன்படி அந்நாளுக்கு அறவிடப்பட்ட கட்டணங்கள் அடுத்த மாத கொடுப்பனவு பட்டியலில் மீள வழங்கப்படும் எனவும், ரீலோர்ட் வாடிக்கையாளர்களுக்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவுக்கு வரும் எனவும் குறித்த அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
Related posts:
வவுனியாவில் கோர விபத்து : 19 பேர் படுகாயம்!
பாரத பிரதமர் மோடியை சந்திக்கிறார் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ!
எதிர்கால சந்ததியினரின் நவீன தொழில்நுட்பம் மற்றும் நிதி அறிவாற்றலை மேம்படுத்துவதே நோக்கம் - அடுத்த ஆ...
|
|
|


