COVID தடுப்பூசிகளை இறக்குமதிசெய்ய தனியாரக்க அனுமதியில்லை – அரசாங்கம் அறிவிப்பு
Friday, January 29th, 2021
COVID தடுப்பூசிகளை நாட்டிற்கு கொண்டு வரவோ, விற்பனை செய்யவோ தனியார் பிரிவினருக்கு அனுமதியளிக்க போவதில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசிகளை கொண்டு வருதல் மற்றும் விநியோகிக்கும் செயற்பாடுகள் அனைத்தும் அரசாங்கத்தினாலேயே முன்னெடுக்கப்படுமென ஜனாதிபதியின் ஆலோசகரும் COVID தடுப்பூசி தொடர்பான நடவடிக்கை பிரிவு பிரதானியுமான லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.
அவசரத் தேவை என குறிப்பிடப்பட்டு தடுப்பூசிகளை கொண்டு வரும் செயற்பாடுகள் அரசாங்கத்தின் தலையீட்டுடனேயே முன்னெடுக்கப்படுமென அவர் கூறியுள்ளார்.
COVID தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதற்கான சந்தர்ப்பம் தனியார் துறையினருக்கு எதிர்காலத்தில் வழங்கப்படுமென லலித் வீரதுங்க தெரிவித்துள்ளளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
கடற்படை தளபதியை சந்திக்கவுள்ளார் நீஷா பிஷ்வால்!
புதிய அரசியல் அமைப்பு: நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் சிறப்புக் குழு நியமனம்!
ஜூன் 15 ஆம் திகதிமுதல் போக்குவரத்துத் துறையில் பல மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் - போக்குவரத்து துறை அம...
|
|
|


