CID திணைக்களத்திற்கு கீழ் TID!
Wednesday, May 15th, 2019
உடன் அமுலுக்கு வரும் வகையில், பயங்கரவாத விசாரணைப் பிரிவினை குற்ற விசாரணை திணைக்களத்துக்கு பொறுப்பான, சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பதில் பொலிஸ்மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்னவால் சேவை நிமித்தம், குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு முன்னர், பயங்கரவாத விசாரணைப் பிரிவானது குற்ற விசாரணை திணைக்களத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் கீழ் காணப்பட்ட நிலையில், பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவால் குறித்த பிரிவு அவரின் கீழ் கொண்டுவரப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
இராஜினாமாவை ஏற்க ஜனாதிபதி மறுப்பு!
தொழில்வாய்ப்புகளை வழங்க வருமான வழிகளை உருவாக்குவது அவசியமாகும் - பிரதமர்!
பழைய பாலம் அகற்றி சீராக்கம்!
|
|
|


