9 மோசடிகள் தொடர்பான விசாரணைகள் நிறைவு!
Tuesday, August 30th, 2016
ஒன்பது பாரிய மோசடிகள் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக ஜனாதிபதி விசாரணைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறித்த விசாரணைகள் தொடர்பான அறிக்கையானது எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும், இந்த விசாரணை அறிக்கைகளை ஒழுங்கு படுத்தும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை ஒழுங்குப்படுத்தப்பட்ட 3 விசாரணை அறிக்கைகளானது ஜனாதிபதி மற்றும் சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது. மேலும் பாரிய மோசடி தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு இதுவரையில் 1500 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் விசாரணை ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது
Related posts:
கொரோனா உயிரிழப்பு 60 ஆயிரத்தை கடந்தது !
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக பண்டாரநாயக்க விமான நிலையத்தில் பிசிஆர் மையம் - அமைச்சர் பிரசன்ன ர...
உலக பாடசாலை உலக உணவுத் திட்டத்தின் பூரண ஒத்துழைப்பை எதிர்காலத்திற்கும் எதிர்பார்க்கின்றொம் - கல்வி அ...
|
|
|


