தடுப்பூசி செலுத்திக்கொண்டமையால் ஒவ்வாமை ஏற்படவில்லை – பதற்றம் காரணமாகவே இந்நிலைமைக்கு ஆளாகினர் – கிளிநொச்சி மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு!

Friday, June 25th, 2021

தடுப்பூசி செலுத்திக்கொண்டமையால் ஒவ்வாமை எதுவும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ள கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் சரவணபவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அனைவரும் பதற்றம் காரணமாகவே இந்நிலைமைக்கு ஆளானதாகவும், அவர்கள் அனைவரும் சிகிச்சையளிக்கப்பட்டு விடுவிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

முன்பதாக கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்ட 46 பேர் இன்று கிளிநொச்சி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி பகுதியில் உள்ள ஆடைத்தொழிற்சாலையின் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர், அவர்கள் மயக்கம் உள்ளிட்ட ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எனினும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசி தொடர்பாக ஒவ்வாமை எதுவும் இல்லை என்று கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சரவணபவன் உறுதிப்படுத்தியுள்ளார்.

அத்துடன் அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தடுப்பூசி செலுத்திக் கொண்டமையால் ஒவ்வாமை எதுவும் ஏற்படவில்லை என தெரியவந்திருப்பதாக வைத்தியர் சரவணபவன் தெரிவித்துள்ளார்.

அவர்கள் அனைவரும் பதற்றம் காரணமாகவே இந்நிலைமைக்கு ஆளானதாகவும், அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு விடுவிக்கப்படுவார்கள் என்றும் கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சரவணபவன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: