84 கோடி ரூபா செலவில் ஹம்பாந்தோட்டையில் யானைகள் சரணாலயம்!
Friday, April 5th, 2019
ஹம்பாந்தோட்டை – லுணுகம்வெஹர தேசிய வனாந்தரத்தில் யானைகள் சரணாலயத்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
84 கோடி ரூபா செலவில் சுமார் 3000 ஹெக்டயர் நிலப்பரப்பில் குறித்த சரணாலயம் நிர்மாணிக்கப்படவுள்ளதாக வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் அறிவித்துள்ளது.
தென்மாகாணத்திலும், ஊவா மாகாணத்திலும் குழப்பம் விளைவிக்கும் யானைகளைப் பிடித்து சரணாலயத்தில் விடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதுடன், சரணாயலத்தைச் சுற்றி 30 கிலோ மீற்றர் சுற்றளவிலான யானை வேலி அமைப்பதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றன.
Related posts:
துறைமுக நகர் பணிகள் ஒக்டோபரில் ஆரம்பம்!
பழிவாங்கலால் பாதித்தோருக்குச் சலுகை - அமைச்சரவை ஒப்புதல்!
பொருளாதார நெருக்கடியால் தொழில்களை இழந்தவர்களை மீண்டும் தொழிலில் அமர்த்த நடவடிக்கை - புதிய செயற்குழு...
|
|
|


