70 ரூபாவுக்கு மண்ணெண்ணெய் – அமைச்சு இணக்கம்!

எரிபொருள்களின் விலை ஏற்றத்தை அடுத்து மீனவர்களுக்கு 70 ரூபாவுக்கு மண்ணெண்ணெய் வழங்குவதற்கு நேற்று முன்தினம் கடற்றொழில் நீரியல்வள அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இணக்கம் காணப்பட்டது.
64 ரூபாவில் விற்பனை செய்யப்பட்ட மண்ணெண்ணெய் தற்போது 10 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனை ஆட்சேபித்து மீனவர்கள் கடும் குரல் எழுப்பி வந்தனர். இதனால் கடந்த மாதம் இது தொடர்பில் ஆராய்ந்த அமைச்சர், நியாய விலையில் எரிபொருள் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதிமொழி வழங்கினார்.
இந்த நிலையில் குறித்த எரிபொருள் விநியோக ஏற்பாடு இதுவரை இடம்பெறாதமை தொடர்பில் அமைச்சரிடம் கேள்வி எழுப்பியபோது மண்ணெண்ணெய் 75 ரூபாவுக்கு வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.
இருப்பினும் குறித்த விலை தொடர்பில் மீனவ அமைப்புக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து தற்போது 70 ரூபாவுக்கு வழங்க இணக்கம் காணப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் மீனவர்கள் வாழும் மாவட்டங்களில் குறித்த சில எரிபொருள் விற்பனை நிலையங்களின் ஊடாக தனியான நிறத்திலான மண்ணெண்ணெய் விற்பனைக்குரிய ஏற்பாட்டினை எரிபொருள் அமைச்சின் ஊடாக விநியோகிக்க கடற்றொழில் நீரியல் வள அமைச்சு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் கூறியதாக குறித்த சந்திப்பில் பங்குகொண்ட மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
Related posts:
|
|