மாத இறுதி வரை நாட்டிலுள்ள அனைத்து வீதி விளக்குகளையும் அணையுங்கள்- நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச கோரிக்கை!
Monday, March 7th, 2022
இன்றுமுதல் மார்ச் 31 ஆம் திகதிவரை தமது பிரதேசத்தில் உள்ள அனைத்து வீதி விளக்குகளையும் அணைக்குமாறும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும் உள்ளுராட்சி தலைவர்களுக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் மின்சாரத்தை சேமிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் பசில் ராஜபக்ஷ கேட்டுக்கொண்டார்.
அத்தோடு மின்சார பாவனையை குறைப்பதற்கான மாற்று வழிகள் குறித்து அறிவிக்குமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
இன்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்த கோரிக்கையை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை ஏப்ரலில் வெளியிட நடவடிக்கை - கல்வி அமைச்சர் அறிவிப்பு!
எரிவாயு விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களுக்கு எரிவாயு பகிர்ந்தளிப்பு - லாஃப் நிறுவனம் அறிவிப்பு!
07 பில்லியன் ரூபாய் இருந்தால் அதனை கையிருப்பில் வைத்து நாட்டை இயல்பு நிலைக்கு மீட்பேன் - பொருளாதார அ...
|
|
|


