70 நாளையும் கடந்து நடைபெறும் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்!
Sunday, May 7th, 2017
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் நிரந்தர அரசாங்க வேலை வாய்ப்பை வழங்க வேண்டும் எனத் தெரிவித்து யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக ஆரம்பித்த காலவரையற்ற கவனயீர்ப்புப் போராட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை(07) 70 ஆவது நாளை எட்டியுள்ளது.
இன்றைய போராட்டம் “பட்டதாரிகளுக்கான போட்டிப் பரீட்சை யாரைப் பரீட்சிக்க பல்கலைக்கழகத்தையா? விரிவுரையாளர்களையா?” என்ற பிரதான கோஷத்துடன் இடம்பெற்று வருகிறது.
தமக்கான வேலை வாய்ப்பைப் பெற்றுத் தருவதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்காத வடமாகாண அரசைக் கண்டித்து வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை கைதடியிலுள்ள வடமாகாண சபையை முற்றுகையிட்டுப் பாரிய போராட்டமொன்றை மேற்கொள்ளுவதற்குத் தீர்மானித்துள்ளனர். இந்தப் போராட்டம் காலை-09 மணி முதல் இடம்பெறும் என வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் தீர்மானித்துள்ளனர்.
Related posts:
யாழ்ப்பாணத்தில் அனைத்து வியாபார நிலையங்களையும் இரவு 10 மணிவரை திறந்திருக்க ஜனாதிபதி கோட்டாபய உத்தரவ...
சங்கானை கிழக்கு கராச்சி பொது மயானம் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு தரப்பினரது ஒத்துழைப்புடன் சிரமதானம...
வரலாற்று சின்னங்களின் உருவங்கள் மாற்றம் – யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் சிவபாலசுந்தரன் குற்றச்சாட்டு!
|
|
|


