67 தாதியர்களை பயிற்சிக்கால உத்தியோகத்தர்களாக நியமிக்க நடவடிக்கை!
Wednesday, April 11th, 2018
வடக்கு மாகாணத்தில் சுகாதார சேவைகள் திணைக்களத்தின் கீழ் உள்ள மருத்துவமனைகளுக்கு 67 தாதியர்களை பயிற்சிக்கால உத்தியோகத்தர்களாக நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மாகாண சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இது பற்றி மேலும் தெரிவித்ததாவது:
வடக்கு மாகாணத்தில் உள்ள வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் தாதியர் பயிற்சிக் கல்லூரிகளில் பயிற்சிகளை நிறைவு செய்து நியமனத்துக்காக தாதிய மாணவர்கள் காத்திருக்கின்றனர்.
மாகாணத்தில் உள்ள மருத்துவமனைகளில் அதிகளவான தாதியர் வெற்றிடங்கள் காணப்படுகின்றன. ஆகவே தேவையின் நிமித்தம் பயிற்சிகளை நிறைவு செய்த மாணவர்களுக்கு நியமனம் கிடைக்கும் வரை 6 மாத கால பயிற்சிக் கால கொடுப்பனவுகளை வழங்கி சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
'என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா' கடன் திட்ட முறைமை ஜனாதிபதியால் அங்குரார்ப்பணம்!
கடந்த 24 மணிநேரத்தில் மேலும் ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொவிட் தொற்றுறுதி!
வெளிப்புற கட்டுமானப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த 58 சிறைக்கைதிகள் காணாமல்போயுள்ளனர் - தகவல்களை தெ...
|
|
|
நியாயமான விலைக்கு அத்தியவசியப் பொருட்களை வழங்குவதற்கு துரித நடவடிக்கை – துறைசார் அதிகாரிகளுக்கு அமைச...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் பயனாளர்களுக்கான உதவித் திட்டங்...
உரிய நேரத்தில் பணம் கிடைக்காவிட்டால் வாக்குச் சீட்டுகள் அச்சிடுவதில் தாமதம் ஏற்படும் - அரசாங்க அச்சக...


