6000 அரச பணியாளர்கள் தேர்தல் கடமைகளில்!

Friday, February 9th, 2018

யாழ் .மாவட்டச் செயலர் தெரிவிப்பு   உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளன தேர்தல் கடமையில் 6ஆயிரத்து 500அரச உத்தியோகத்தர்கள் ஈடுபடவுள்ளனர் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன இவ்வாறு யாழ்.மாவட்டச் செயலரும் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலருமான நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்

நாளை நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான பாதுகாப்பு மற்றும் வாக்களிப்பு நிலைய ஏற்பாடுகள் தொடர்பில் நேற்று நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார் அவர் தெரிவித்ததாவது:-நாளை நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 4 இலட்சத்து 68 ஆயிரத்து 476 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர் அவர்கள் வாக்களிப்தற்காக 521 வாக்களிப்பு நிலையற்களும் 243 வாக்கெண்ணும் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன இந்த முறை அந்த வட்டாரங்களில் வாக்கெண்ணும் பணிகள் இடம்பெறவுள்ளன யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மத்திய வாக்கெண்ணும் நிலையமாக செயற்படவுள்ளது யாழ்.மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்கெண்ணும் நிலையங்களிலிருந்தும் முடிவுகள் பெறப்பட்டு யாழ். மத்திய நிலையத்தில் முடிவுகள் அறிவிக்கப்படும்

இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் போக்குவரத்துச் சேவையின் பேரூந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன ஒவ்வொரு வாக்களிப்பு நிலையங்களிலும் 2 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

பொதுமக்கள் காலை 7 மணிமுதல் மாலை 4 மணிவரை தமது வாக்குகளை அளிக்க முடியும் இரவு 8.மணிக்கு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் அடையாள அட்டை மற்றும் அiடாள அட்டை இல்லாதவர்கள் தேர்தல் திணைக்களத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டையுடன் சென்று வாக்களிக்க முடியும்

Related posts: