60 நாட்களுக்கு மேல் கட்டணம் செலுத்த தவறியோரது நீர் விநியோகம் துண்டிப்பு – அடுத்த மாதம் முதல் கடுமையான தீர்மானம் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவிப்பு!
Tuesday, December 20th, 2022
கட்டணம் செலுத்தத் தவறிய பாவனையாளர்களுக்கான நீர் விநியோகம் அடுத்த மாதம்முதல் துண்டிக்கப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
8,000 மில்லியன் ரூபா வரை காணப்பட்ட நிலுவைத் தொகை, 4000 மில்லியன் ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக மீண்டும் 6,000 மில்லியன் ரூபா கட்டணம் நிலுவையில் உள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் உதவி பொதுமுகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், 60 நாட்களுக்கு மேல் கட்டணம் செலுத்த தவறிய அனைத்து பயனாளர்களுக்கும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
சுமார் 08 இலட்சம் மக்கள் 03 மாதங்கள் அல்லது அதற்கும் அதிக நாட்கள், நீர் கட்டணம் செலுத்த தவறியுள்ளதாக ஏக்கநாயக்க வீரசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சங்கத்தானை முருகன் விளையாட்டு கழகத்திற்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால் சீருடைக்கான நிதியுதவி வழங்கிவை...
மொரிஸியஸ் நாட்டின் முன்னாள் தூதுவர் ஈஸ்வரன் காலமானார்
தேவையான எரிபொருள் இருப்புகளை வழங்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இணங்கியுள்ளதாக – எரிசக்தி அமைச்...
|
|
|


