6 மாத காலம் கட்டணத்தை செலுத்தாத அனைவருக்கும் நீர் வெட்டு – அடையாளம் காணப்பட்டுள்ள 73 ஆயிரம் பேரில் 100 பேர் மட்டுமே செலுத்தியுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவிப்பு!

Tuesday, September 21st, 2021

ஆறு மாதங்களுக்கு மேலாக கட்டணத்தை செலுத்தாத 73 ஆயிரம் பேருக்கு நீர்விநியோகத்தை நிறுத்த தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தீர்மானித்துள்ளது.

குறித்த 73 ஆயிரம் பேரிடம் இருந்து 145 மில்லியன் ரூபாய் செலுத்தப்படாமல் இருப்பதாகவும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

இவ்வாறு கட்டணம் செலுத்தப்பட்டதமையினால் திணைக்களத்திற்கு 8 பில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

அத்துடன் 6 மாதங்களுக்கு மேல் தண்ணீர் கட்டணம் செலுத்தாதவர்கள் அதற்குரிய கொடுப்பனவுகளை செலுத்துமாறும் குறும்செய்தி ஊடாக குறித்த சபை கேட்டுக்கொண்டுள்ளது.

அதற்கமைவாக இதுவரை 100 பேர் மட்டுமே அதற்கான கட்டணங்களை செலுத்தியுள்ளதாகவும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது

சுற்றுலாத் துறையின் வீழ்ச்சியால் நாடு முழுவதும் உள்ள பல ஹோட்டல்கள் நீர் கட்டணத்தை செலுத்தவில்லை என்றும் இந்த நிறுவனங்களும் வாடிக்கையாளர் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: