512 சிறைக்கைதிகளுக்கு பொதுமன்னிப்பு!
Tuesday, February 4th, 2020இலங்கையின் 72ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி 512 சிறைக்கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார்.
எனினும் இதில் பாரிய குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான கைதிகள் எவரும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இது தொடர்பான தகவல்கள் வெளியானபோது குறிப்பாக பாரத லக்ஷ்மன் கொலை வழக்கில் மரண தண்டனைப் பெற்றுள்ள துமிந்த சில்வாவும் இந்தப் பட்டியலில் இடம்பெறுவார் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன.
எனினும் இதனை சிறைச்சாலைகள் ஆணையாளர் மறுத்திருந்தார். வழமையாக ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படும் சிறைக்கைதிகளை போன்று இந்த தடவையும் சிறு குற்றங்களுக்காக தண்டனை பெற்றவர்களே விடுவிக்கப்படுவர் என்று சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்திருந்தார்.
Related posts:
பொலிஸ் மா அதிபரை கடுமையாகச் சாடிய ஜனாதிபதி!
தேர்தலுக்கான முதற்கட்டப் பணிகள் ஆரம்பம் - தேர்தல்கள் ஆணைக்குழு!
தேவைக்கு மேலதிகமாக 7 இலட்சம் மெட்ரிக் டன் அரிசி இருப்பதாக விவசாய அமைச்சு தெரிவிப்பு!
|
|
|


