5 வருட கடனாக 6 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான எரிபொருளை சவுதி அரேபியாவிடம் இருந்து பெற்றுக்கொள்ள இலங்கை நடவடிக்கை!
Thursday, September 8th, 2022
சவுதி அரேபியாவில் இருந்து எரிபொருளை பெறுவதற்காக 5 வருட கடனாக 6 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குமாறு கோரி சுற்றுச்சூழல் அமைச்சர் நசீர் அஹமட் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரம சிங்கவின் சவுதி அரேபியாவிற்கான தூதுவர் என்ற வகையில் நசீர் அஹமட் குறித்த பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வாரம் சவுதி அரேபியாவுக்கு விஜயத்தை மேற்கொண்டு இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக ஏரிபொருளைப் பெறுவதற்காக 5 வருட கடனாக 6 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குமாறு கோரி பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளார்.
நசீர் அஹமட் ஆகஸ்ட் 28 ஆம் திகதிமுதல் செப்டம்பர் 1ஆம் திகதி வரை சவுதி அரேபியாவில் தங்கியிருந்தார்.
இதன் பின்னர் நாடு திரும்பிய அமைச்சர் திங்கட்கிழமை அதிபர் மற்றும் அமைச்சரவைக்கு இதுதொடர்பாக விளக்கம் அளித்ததாகவும் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே
பெட்ரோலை ஏற்றிய கப்பலொன்று இந்த வாரத்திற்குள் நாட்டை வந்தடையவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த கப்பலுக்கான ஆரம்பக் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். கப்பல் நாட்டை வந்தடைந்தவுடன் மிகுதி கட்டணம் செலுத்தப்படவுள்ளது.
மேலும், 35,000 முதல் 40,000 மெட்ரிக் தொன் பெட்ரோலை ஏற்றிய கப்பலே இவ்வாரத்திற்குள் நாட்டை வந்தடையவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
000
Related posts:
|
|
|


