விஞ்ஞான பாடத்திற்கு அடுத்த ஆண்டு முதல் ஈ பாடப்புத்தகம் ( E-Text book)

Sunday, September 18th, 2016

அடுத்த ஆண்டில் இருந்து தரம் 11 ஆம் விஞ்ஞான படத்திற்காக கணனி சலன சித்திரம் (Animations) அடங்கிய ஈ பாடப் புத்தகத்தை ( E-Text book) அறிமுகப்படுத்த கல்வி வெளியீட்டு திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

அச்சடிக்கப்பட்ட பாடப் புத்தகங்களுக்கு மேலதிகமாக இறுவட்டு வடிவில் இந்த ஈ பாடப்புத்தகம் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.இதற்கு 20 மிலலியன் ரூபாவுக்கும் மேல் செலவிடப்பட உள்ளது. ஈ பாடப் புத்தகத்தை தயாரிக்க 10 நிறுவனங்கள் தமது விண்ணப்பங்களை சமர்பித்துள்ளன.

அவற்றில் தகுதியான நிறுவனம் ஒன்றை தெரிவு செய்ய உள்ளதுடன் ஈ பாடப் புத்தகங்களை தயாரித்து முடிக்க சுமார் ஆறு மாதங்கள் செல்லும் என கூறப்படுகிறது. விஞ்ஞானப்படத்தில் செயன்முறை பயிற்சிகளுடன் கூடிய படங்களுக்கு இந்த சலன சித்திரம் மிகவும் முக்கியமானது.

உதாரணமாக மாணவர் ஒருவர் உணவு சமிப்பாட்டு கட்டமைப்பு செயற்பட்டை இந்த ஈ பாடப்புத்தகத்தின் வழியாக பெற்றுக்கொள்ள முடியும்.

முதலில் 11 ஆம் தரத்திற்கு அறிமுகப்படுத்தப்படும் இந்த ஈ பாடப் புத்தகம் பின்னர் கீழ் வகுப்பு மாணவர்களுக்கும் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

bigstock-A-nice-ebook-in-front-of-norma-20434130

Related posts: