5 ஆம் திகதிமுதல் மீண்டும் விலை குறைக்கப்படுகின்றது லிட்ரோ எரிவாயு – எரிவாயு நிறுவனத்தின் தலைவர் அறிவிப்பு!

நாட்டில் எதிர்வரும் 5 ஆம் திகதிமுதல் மீண்டும் லிட்ரோ எரிவாயு விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த விடயத்தை லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், நேற்றுக் காலை மற்றுமொரு எரிவாயு கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளது. இந்த நிலையில் 3,700 மெற்றிக் தொன் எரிவாயு இறக்கும் பணி ஆரம்பமாகும்.
இதேவேளை உலக சந்தையில் எரிவாயுவின் விலையில் தற்போது குறைவு ஏற்பட்டுள்ளது. இதன் பயனை மக்களுக்கு வழங்கும் நோக்கில் எதிர்வரும் 5ஆம் திகதி முதல் மீண்டும் லிட்ரோ எரிவாயுவின் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
வடக்கு மாகாணத்தில் சுமார்-300 கோடி ரூபா நிதிப்பங்களிப்பில் இந்திய - இலங்கை நட்புறவு மையம்!
நாடாளுமன்றம் பொது இடம் அல்ல - கொரோனா சட்டம் நாடாளுமன்றத்திற்கு பொருந்தாது - சுகாதார அமைச்சர் தெரிவி...
நிதி நெருக்கடி காரணமாக வளங்களை அணுகுவது தடைப்பட்டுள்ளது - 4 ஆவது ஆசிய பசுபிக் நீர் உச்சி மாநாட்டில் ...
|
|