40 மில்லியனில் சிறுநீரக சிகிச்சை பிரிவு வவுனியா வைத்தியசாலையில்!

Sunday, July 31st, 2016

40 மில்லியன் ரூபா செலவில் வவுனியா பொது வைத்தியசாலையில் சிறுநீரக சிகிச்சை பிரிவு ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கு.அகிலேந்திரன் தெரிவித்தள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்-

வவுனியா மாவட்டத்திலும் அதனை சூழவுள்ள மாவட்டங்களிலும் சிறுநீரக நோயாளிகள் அதிகரித்து வருவதனை அவதானிக்க முடிகின்றது. இதன் நிமிர்த்தம் வவுனியா பொது வைத்தியசாலையில் சிறுநீரக நோய்ககான சிகிச்சை நிலையமொன்றினை அமைக்க மத்திய சுகாதார அமைச்சின் ஊடாக நிதி கிடைக்கப்பெற்றுள்ளது.

இந்த வகையில் சிறுநீரக சிகிச்சை பிரிவுக்கான புதிய கட்டடத்தொகுதியொன்று அமைக்கப்படவுள்ளதுடன் சிறுநீரக நோய் பிரிவுக்கான உபகரண தொகுதிகளும் பொருத்தப்படவுள்ளது.

இச் சிகிச்சை நிலையம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் சிறுநீரக நோயாளர்கள் தமக்கான முழுமையான சிகிக்சையை வவுனியா பொது வைத்தியாசலையில் பெற முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts:

கொரோனா அச்சம் - பேருந்துகளில் ஆசனங்களின் எண்ணிக்கையின் அடிப்படையிலேயே பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும்...
தொழிலுக்காக வெளிநாடு செல்லும் நபர்களிடம் இருந்து பதிவுக் கட்டணமாக 16 ஆயிரத்து 416 ரூபா அறவிடப்படும் ...
சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி நடைமுறை - இன்று நள்ளிரவுமுதல் தொலைபேசி கட்டணங்களில் திருத்தம்!