40 ஆயிரம் மெற்றிக் தொன் டீசலுடன் இலங்கை வருகைதரும் மற்றுமொரு கப்பல் – இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவிப்பு!

இந்திய கடன் வசதிகளின் கீழ் 40 ஆயிரம் மெற்றிக் தொன் டீசலை ஏற்றிய மற்றுமொரு கப்பலொன்று இலங்கையை வந்தடையவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு நேற்றுமுன்தினம் கொண்டுசெல்லப்பட்ட 40 ஆயிரம் மெற்றிக் தொன் டீசல் நேற்று விநியோகிக்கப்பட்டவதாக பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 3 ஆயிரத்து 500 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பலொன்று இலங்கையை வந்தடையவுள்ளதாக லிற்றோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
அத்துடன், அதிக விலைக்கு சமையல் எரிவாயு கொள்கலனை விற்பனை செய்வோர் தொடர்பில் சுற்றிவளைப்புகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதாக எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
யாழில் கடமைகளை பொறுப்பேற்காத வைத்தியர்கள் - நோயளர்கள் சிரமத்தில்!
மினுவாங்கொட போன்று மற்றுமொரு கொரோனா கொத்தணி ஏற்படும் ஆபத்து - எச்சரிக்கும் இராணுவ தளபதி!
கடவுச்சீட்டுக்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் இன்றுமுதல் வழமை போன்று முன்னெடுப்பு - குடிவரவு மற்றும்...
|
|