4 பிரதான அம்சங்களுடன் 34 ஆவது அமர்வில் உள்ளக பொறிமுறை  விபர அறிக்கையை சமர்ப்பிக்கின்றது அரசாங்கம்!

Saturday, September 24th, 2016

ஜெனிவா மனித உரிமை பேரவையில் எதிர்வரும்  2017 ஆம் ஆண்டு  மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் 34 ஆவது கூட்டத்  தொடரை எதிர்கொள்ளும் வகையில் அரசாங்கம்   திட்டங்களை வகுத்துவருகின்றது.

குறிப்பாக   அடுத்தவருடம் பெப்ரவரி மாதமாகும்போது    நான்கு பிரதான அம்சங்களைக் கொண்ட உள்ளக விசாரணை பொறிமுறையின் வடிவத்தை    தயாரித்துவிடுவதற்கு அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.

அதாவது காணாமல் போனோர் குறித்த அலுவலகம் உண்மையை கண்டறியும்  ஆணைக்குழு நட்டஈடு வழங்கல் மீள்நிகழாமையை உறுதிபடுத்தல்   ஆகிய நான்கு  அம்சங்களை பிரதானமாகக்கொண்டே   அரசாங்கம் உள்ளக விசாரணை பொறிமுறையை  தயாரித்து வருகின்றது.

குறிப்பாக அடுத்தவருடம் பெப்ரவரி மாதமாகும்போது  உள்ளக விசாரணை பொறிமுறையின் இறுதி வடிவம் தயாரிக்கப்பட்டுவிடும் என்றும்  அதன் பின்னர் சட்டமூலங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளக விசாரணை பொறிமுறை  தொடர்பான    வரைபு   ஜெனிவா மனித உரிமை பேரவைக்கு சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொறுப்புக்கூறலுக்கான பொறிமுறை விடயத்தில்  மக்களின் கருத்தறியும் செயற்பாடு   தொடர்பானஅறிக்கை விரைவில் அரசாங்கத்துக்கு வழங்கப்படவுள்ள நிலையில்   ஒக்டோபர் மாதம் நடுப்பகுதியில்   விசாரணை பொறிமுறையின் இறுதி வடிவத்தை தயாரிக்கும் பணிகளை அரசாங்கம் ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அரசாங்கத்தின்  பொறுப்புக்கூறல் விசாரணை பொறிமுறையானது  நான்கு  அம்சங்களை கொண்டதாக அமையவுள்ள நிலையில் அதன் முதலாவது கட்டமாக  தற்போது  காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் அமைக்கப்படவுள்ளது.

அதற்கான சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.  அதனையடுத்து விரைவில் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு நிறுவப்படவுள்ளது.  தென்னாபிரிக்காவில் செயற்பட்ட உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவைப் போன்றதான ஒரு ஆணைக்குழுவே  இலங்கையின் தன்மைகளுக்கு  ஏற்ப    நிறுவப்படுமென அரசாங்கம் அறிவித்திருக்கிறது.

அடுத்ததாக மனித உரிமை மீறல்கள், மற்றும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்டஈடு வழங்கும் செயற்பாடும் இடம்பெறவுள்ளது.  மேலும்  மீள்நிகழாமை தொடர்பான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படவுள்ளன. இறுதியாக புதிய அரசியலமைப்பை உருவாக்கி  அதனூடாக சிறுபான்மை மக்களின் பிரச்சினைக்கு  நிரந்தர தீர்வைக் காண உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பல்வேறு மட்டங்களில்   விசாரணை பொறிமுறை  முன்னெடுக்ககப்படவுள்ளது. எனினும்  இந்த செயற்பாட்டின் இறுதிக் கட்டத்திலேயே    விசாரணை பொறிமுறையில் சர்வதேச  நீதிபதிகள் இடம்பெறுவார்களா? இல்லையா? என்பது  தொடர்பில் தீர்மானிக்கப்படும்.

கடந்த வருடம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில்  நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு அமைவாகவே பொறுப்புக்கூறல் பொறிமுறை முன்னெடுக்கப்படவுள்ளது.

அந்த வகையில் கடந்த ஜூன் மாதம் ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 33 ஆவது கூட்டத் தொடரில் பிரேரணை அமுலாக்கம்  தொடர்பான வாய்மூல அறிக்கையை   ஐ.நா. மனித உரிமை ஆணயைாளர் செய்ட் அல் ஹுசேன்  சமர்ப்பித்திருந்தார்.

அதன்படி   அடுத்த வருடம் மார்ச்  மாதம் நடைபெறவுள்ள  ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 34 ஆவது கூட்டத் தொடரில்  பிரேரணை  அமுலாக்கம் குறித்த  இறுதி அறிக்கை  மனித உரிமை ஆணையாளரினால்   சமர்ப்பிக்கப்படவுள்ளார்.

அதாவது   ஜெனிவா பிரேரணையை அரசாங்கம் எவ்வாறு நிறைவேற்றியது என்பது தொடர்பான எழுத்துமூல அறிக்கையை   34 ஆவது கூட்டத் தொடரில்   பிரேரணையாக    செய்ட் அல் ஹுசேன் முன்வைப்பார் என   தெரிவிக்கப்படுகின்றது.

UN-Arms

Related posts: