4 கோடி ரூபாய் பெறுமதியான தங்கம் அபகரிப்பு!

புறக்கோட்டையில் உள்ள தங்க ஆபரணங்களை உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் சுமார் 4 கோடி ரூபாய் பெறுமதியான தங்கத்தை மிகவும் சூட்சுமமான முறையில் அபகரித்து செல்லப்பட்ட சம்பவமொன்று புறக்கோட்டையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வெளிவிவகார அமைச்சின் பரிசோதகர்கள் என்று தங்களை இனங்காட்டிக்கொண்ட நால்வரை, அங்கு வேலைச்செய்தவர்களின் கைகளுக்கு போலியான முறையில் கைவிலங்கிட்டு, தங்கத்தை அபகரித்து சென்றுள்ளனர்.
அவ்வாறு அபகரித்தவர்கள் தொடர்பில் மிகவும் முக்கியமான தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அதுமட்டுமன்றி அவர்களிடமிருந்து சுமார் ஒரு இலட்சம் ரூபாயையும், கடவுச்சீட்டுகளையும் அக்குழுவினர் அபகரித்துச்சென்றுள்ளனர். இந்தத் தங்க நகை ஆபரண பட்டறையில் வேலைச்செய்வோரில் பலர், இந்தியப் பிரஜைகள் என்று அறியமுடிகின்றது.
Related posts:
தம்பாட்டியில் நள்ளிரவு திருடர்கள் கைவரிசை - ஆலயம் உள்ளிட்ட பல இடங்கள் உடைத்து பெறுமதியான பொருட்கள் த...
ஓகஸ்ட் 30 ஆம் திகதிக்கு பின்னர் ஊரடங்கு நீடிக்கப்படாது - இருப்பினும் சம்பந்தப்பட்ட தரப்பினரின் பரிந்...
யாழ் மாநகரின் ஆளுகைக்குள் உள்ள குளங்கள் அனைத்தும் தூர்வாரப்படு, கழிவுநீர் வாங்க்கால்கள் அனைத்தும் பா...
|
|