4 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கொல்லப்பட்டவர்களின் 48 ஆவது நினைவு தினம் அனுஸ்டிப்பு!
 Monday, January 10th, 2022
        
                    Monday, January 10th, 2022
            
4 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கொல்லப்பட்டவர்களின் 48 ஆவது நினைவு தினம் இன்று காலை 10 மணியளவில் அனுஷ்டிக்கப்பட்டது.
குறித்த மாநாட்டில் கொல்லப்பட்டவர்களின் நினைவாக, யாழ்ப்பாணம் முற்றவெளியில் அமைக்கப்பட்டுள்ள நினைவாலயத்தில் இந்த நினைவஞ்சலி நடத்தப்பட்டது.
இதன்போது அரசியல் கட்சி பிரதிநிதிகள் பொது மக்களை கலந்துகொண்டு அஞ்சலியை செலுத்தினர்.
1974 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3 ஆம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதிவரை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நான்காவது உலக ஆராய்ச்சி மாநாட்டின் இறுதிநாள் விருந்துபசார வைபவத்தின் போது வன்முறைக் கும்பலொன்றினால் நடத்தப்பட்ட தாக்குதலில் மாநாட்டில் கலந்துகொண்டிருந்த 11 பேர் கொல்லப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
Related posts:
கந்தர்மடம் பகுதி மக்களது பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு வேண்டும் - ஈ.பி.டி.பியின் நல்லூர் பிரதேச நிர்...
பிரித்தானிய அமைச்சர் இலங்கைக் விஜயம்!
மாகாணசபை தேர்தலை எதிர்கொள்ள அரசு தயாராகவுள்ளது -  அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவிப்பு!
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        