4 ஆம் திகதி கூடுகின்றது அரசிலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தை ஆராய்ந்து பார்க்கும் ஆலோசனை குழு!

Saturday, October 1st, 2022

அரசிலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தை ஆராய்ந்து பார்ப்பதற்கு நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பான அமைச்சுசார் ஆலாசேனைக்குழு கூடவுள்ளது.

எதிர்வரும் 4 ஆம் திகதி நாடாளுமன்ற வளாகத்தில் இந்த குழு கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசிலமைப்பின் 22  ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தை எதிர்வரும் 6ஆம், 7ஆம் திகதிகளில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அரசிலமைப்பின் 22ஆம் திருத்தச் சட்டமூலத்தை ஆராய்ந்து பார்ப்பதற்கு நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பான அமைச்சுசார் ஆலாசேனைக்குழு எதிர்வரும் 4ஆம் திகதி 2 மணிக்கு கூடுவதற்கு தீர்மானித்துள்ளது.

அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தலைமையில் கூடவுள்ள இந்த ஆலாசேனைக்குழு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இந்த சட்டமூலம் தொடர்பான தங்களின் கருத்துக்கள் மற்றும் பிரேரணைகளை சமர்ப்பிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மின்சக்தி மற்றும் வலுசக்தி நடவடிக்கைகள் தொடர்பான அமைச்சுசார் ஆலாசேனைக்குழு கூட்டம் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தலைமையில் அன்றையதினம் காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது.

அத்துடன் கடந்த 29ஆம் திகதி முதல் தடவையாக கூடிய தேசிய சபையின் அடுத்த கூட்டம் எதிர்வரும் 6ஆம் திகதி 3 மணிக்கு இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற ஊடக பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய கோரி கோனாவில் மகா வித்தியால மாணவர்கள் பெற்றோர்களுடன் இணைந்து ...
பொறியியல் துறை மற்றும் நிர்மாணத்துறைகளில் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண...
ஜனாதிபதி ரணில், நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச அமைச்சரவை பத்திரம் - வேட்பாளர்களின் வைப்பு தொகையை அத...