36 பாடசாலைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

Sunday, April 30th, 2017

சூழலை டெங்கு நுளம்பு பரவும் வகையில் வைத்திருந்த 36 பாடசாலைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

787 பாடசாலைகளில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் விசேட வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர குறிப்பிட்டார்.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 39 ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்தது.

யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, கொழும்பு, கம்பஹா, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலேயே அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகுவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு மேலும் சுட்டிக்காட்டியது

Related posts:


ஜூலை மாதம் 13, திகதிமுதல் 16 ஆம் திகதி வரை தபால் மூல வாக்கு பதிவு நடைபெறும் - தேர்தல்கள் ஆணைக்குழு...
பொதுமக்கள் ஒன்று கூடுவதை தடுக்க யாழ் வர்த்தக சங்கம் விஷேட திட்டம் - வீடுகளில் இருந்து பொருட் கொள்வன...
கிழக்கில் வேகமாக பரவும் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை - கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் எச்...