இயலாதவையென ஒன்றுமில்லை – மேலதிகமாக திட்டங்களை மேற்கொள்ளவும் தயார் – இராணுவத் தளபதி தெரிவிப்பு!

Sunday, February 13th, 2022

சேதன பசளை உற்பத்திச் செயற்பாடுகளின் ஒருங்கிணைப்புக்கு மேலதிகமாக அது தொடர்பிலான விழிப்புணர்வு செயற்பாடுகளை முன்னெடுக்கும் இயலுமை இராணுவத்திற்கு உள்ளது என தெரிவித்துள்ள பசுமை விவசாய செயல்பாட்டு மையத்தின் தலைவர் ஜெனரல் ஷவேந்திர சில்வா இயலாதவையென ஒன்றுமில்லை என்பதால் உற்பத்திக்கு அவசியமான அடிப்படை வசதிகள் மற்றும் மூலப்பொருட்களை உற்பத்தி செய்து போக்குவரத்துச் செய்வதில் சிக்கல்கள் இருப்பின் அவற்றை நிவர்த்திக்கும் இயலுமையும் இராணுவத்திடம் உள்ளதெனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சிறுபோக உற்பத்தியை இலக்காக கொண்டு இராணுவம் குறிப்பிடத்தக்க பங்களிப்பை மேற்கொண்டுள்ளதோடு, அதற்கான கலந்துரையாடல்கள் மாவட்ட செயலகங்கள், விவசாய துறைசார் நிபுணர்களுடனும் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும், இதன்போது விவசாய சமூகங்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்த போது அவர்கள் தரை மட்டத்திலான தொடரச்சியான விழிப்புணர்வுச் செயற்பாடுகளின் அவசியத்தை வலியுறுத்தியிருந்தாகவும்  அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இவற்றுக்கு இராணுவம் ஒத்துழைப்பு வழங்க தயார் நிலையில் உள்ளதுடன் மாவட்ட மட்டத்தில் “லக் பொஹொரட” உர நிறுவனம், உர செயலகம் ஆகியவற்றுடன் இணைந்து கண்காணிப்பு பணிகளையும் மேற்கொள்ள முடியுமெனவும் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்தோடு, விவசாய இராஜாங்க அமைச்சு தேசிய அளவில் சேதன பசளை விநியோகத்தை ஆரம்பித்துள்ள நிலையில், பெரும்போகத்தின் போது ஏற்படக்கூடிய நடைமுறைச் சிக்கல்களை நிவர்த்திப்பதற்கான தீர்மானங்கள் தொடர்பில் ஆராயப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும் விவசாய அமைச்சின் செயலாளர், பசுமை விவசாயக் திட்டத்தின் வெற்றிக்கு அனைத்து பொறுப்புள்ள தரப்புக்களும் தங்களின் சிறந்த ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

அதேநேரம் பசுமை விவசாய செயல்பாட்டு மையத்தின் கண்காணிப்பு மற்றும் வழிகாட்டலின் கீழ் மாவட்ட மட்டத்திலான சேதன பசளை உற்பத்திகள் மேற்கொள்ளப்பட உள்ளனவென தெரிவித்த இராஜாங்க அமைச்சர் சஷேந்திர ராஜபக்ஷ, இக்குழுவில், மாவட்டச் செயலாளர்கள், மாவட்ட விவசாயப் பணிப்பாளர், மாகாண பிரதி விவசாயப் பணிப்பாளர், மாவட்ட விவசாய பணிப்பாளர், பசுமை விவசாய செயற்பாட்டு மையத்தின் பிரதிநிதிகள் ஆகியோரும் அடங்குவர். உர உற்பத்தி, அளவு, போக்குவரத்து, சேமிப்பு, விவசாயிகளுக்கு விநியோகம் ஆகிய முழுப் பொறுப்பு, மற்றும் அதன் பயன்பாடு அந்தந்த மாவட்ட குழுக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதெனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியிருந்த குறிப்பிடத்தக்கது.

000

Related posts: