3 மாதங்களின் பின்னர் QR முறைமை நீக்கப்படும் – அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவிப்பு!

Tuesday, February 21st, 2023

எரிபொருள் விநியோகத்திற்காக தற்போது நடைமுறைப்படுத்தப்படும் QR முறைமை எதிர்வரும் 3 மாதங்களின் பின்னர், நீக்கப்படும் என மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு ஹிரு தொலைக்காட்சியில் இடம்பெற்ற சலகுன அரசியல் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு கருத்துவெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான சகல நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் தெரிவித்துள்ளார்

இது தொடர்பான யோசனை அடுத்த மாதம் நாடாளுமன்றில் முன்வைக்கப்படும் என அவர் தெரிவித்துள்மை குறிப்பிடத்தக்கது

Related posts:


இலங்கையின் பொருளாதார மீள் எழுச்சிக்கு அதிகபட்ச ஒத்துழைப்பை வழங்கத் தயார் - இலங்கைக்கான பதில் சீன தூத...
68 வீதமான பாடசாலை சீருடைத் துணிகள் வலய அலுவலகங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன - இராஜாங்க அமைச்சரா...
இன்று பெரிய வெள்ளி - விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவ...