293 ஆயுர்வேத வைத்தியர்கள் நியமனம்!

Friday, July 7th, 2017

புதிதாக 293 ஆயுர்வேத வைத்தியர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர் . இவர்களுக்கான நியமனம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வழங்கப்படவுள்ளது. இது தொடர்பான விபரங்கள் இன்று வெளியாகியுள்ள வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வழங்கும் முன்னுரிமை பட்டியலை அடிப்படையாக கொண்டு இந்த நியமனம் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆயுர்வேத வைத்தியர்களாக தகுதி பெற்று 600 பேர் காணப்படுகின்றனர். இவர்களுக்கான நியமனமும் விரைவில் வழங்கப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

Related posts: