27ஆம் திகதி கொரிய மொழி பரீட்சை ஆரம்பம்!
Saturday, April 22nd, 2017
எதிர்வரும் 27ஆம் திகதி தென்கொரியாவில் தொழில் வாய்ப்பை எதிர்பார்த்துள்ள இளைஞர் யுவதிகளுக்கு கொரிய மொழி தேர்ச்சி தொடர்பான பரீட்சை ஆரம்பிக்கப்படவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இம்முறை பரீட்சைகள் கணனியூடாகவே நடைபெறவுள்ளதாகவும் பரீட்சைக்கான திகதி நேரம் மற்றும் பரீட்சை நிலையம் குறித்த விபரங்கள் www.slbfe.lk என்ற இணையத்தள முகவரியில் பார்வையிட முடியும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
27ம் திகதி ஆரம்பமாகும் பரீட்சை நான்கு மாதங்களுக்கு இல. 205, தெபானம, பன்னிபிட்டி என்ற முகவரியிலுள்ள கொரிய கணனி மத்திய நிலையத்தில் இடம்பெறவுள்ளது. இம்முறை பரீட்சைக்காக 22888 பேர் விண்ணப்பத்துள்ளனர். இவர்களிலிருந்து 16431 பேர் உற்பத்தித்துறை சம்பந்தமான பரீட்சைக்கும் 6457 பேர் கடற்றொழில் துறை பரீட்சைக்கும் தோற்றவுள்ளனர்
Related posts:
ரூபாவின் பெறுமதி ஸ்திரமான நிலையில் - நிதி அமைச்சர்
பிச்சை எடுத்தாவது பிள்ளைகளின் கல்வியை முன்னேற்றுங்கள் - வலயகல்விப் பணிப்பாளர்!
அரச ஊழியர்களின் பணி நேரம் தொடர்பில் கடுமையான கட்டுப்பாடுகள் - நடைமுறைப்படுத்தியது பொதுநிர்வாக, உள்ந...
|
|
|


