26 இலங்கைப் பணிப்பெண்கள் மீண்டும் நாட்டுக்கு திரும்பல்!

Wednesday, April 17th, 2019

குவைத் நாட்டில் பணிக்கு சென்று அங்கு பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்த 26 இலங்கைப் பணிப்பெண்கள் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இந்த இலங்கைப் பணிப்பெண்கள் பணிபுரிந்த வீட்டு உரிமையாளர்களினால் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளதால் குவைத்தில் உள்ள இலங்கைத் தூதுவராலயத்திற்கு சென்று பின்னர் சுரக்ஷா முகாமில் தடுத்து வைக்கப்பட்டவர்களே, இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த இலங்கைப் பணிப்பெண்கள் இன்று காலை 6.30 மணியளவில் ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தின் யூ. எல். 230 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இந்த குழுவில் இரண்டு பேர் 1 வருடம் முதல் 2 வருடங்கள் வரை அங்கு பணிபுரிந்துள்ளதுடன், ஏனைய 24 பேரும் ஒரு வருடத்துக்குக் குறைவான காலமே குவைத்தில் பணி புரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் 05 பேர் பல்வேறு இன்னல்கள், கொடுமைகள் காரணமாக நோய் வாய்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் அனைவரும் நாட்டின் பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், இவர்கள் தமது சொந்த இடங்களுக்குச் செல்வதற்கான பஸ் கட்டணங்களுக்கான கொடுப்பனவுகள் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தால் வழங்கப்பட்டுள்ளது.

Related posts:

இலங்கையில் தனி நபரொருவரின் குறைந்தபட்ச மாதாந்தச் செலவு 5 ஆயிரத்து 353 ரூபாவாக பதிவு - தொகை மதிப்பு ம...
ஒடுக்கப்பட்ட மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறிக்கொள்ளும் முதலாளித்துவ அரசியல் கட்சிகளிடம் பில...
5 மாதங்களில் 120,000 பேர் வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு பயணம் - இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ...