24 மணிநேரத்தில் 2,738 பேருக்கு கொவிட்-19 தொற்று!
Friday, June 11th, 2021
கடந்த 24 மணிநேரத்தில் நாட்டில் 2 ஆயிரத்து 738 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.
அவர்களில் 23 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் தடுப்புப் பிரிவு அறிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் கொவிட் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 16 ஆயிரத்து 134 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் இதுவரையில் ஒரு இலட்சத்து 82 ஆயிரத்து 238 பேர் குணமடைந்துள்ளனர்.
அதேவேளை தொற்று உறுதியான 31 ஆயிரத்து 986 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
மடு அன்னையின் ஆடி மாத திருவிழா ஆரம்பம்!
சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுக்கள் ஆரம்பம் - அடுத்த வாரம் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகளு...
முட்டை உற்பத்திக்கு நீணடகால வேலைத்திட்டம் - அமைச்சர் நளின் பெர்னாண்டோ அதிரடி நடவடிக்கை!
|
|
|


