24 நாட்கள் கழித்து கொரோனா தொற்று – அதிர்ச்சியில் மக்கள்!

தென் கொரியாவில் இருந்து நாடு திரும்பி 14 நாட்கள் கண்காணிப்பில் இருந்து வீடு திரும்பிய மத்துகமையை சேர்ந்த ஒருவருக்கு 10 நாட்களின் பின்னர் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்று செய்தி வெளியாகியுள்ளது.
மார்ச் 10ம் திகதி தென்கொரியாவில் இருந்து விரும்பிய குறித்த நபர் விமான நிலையத்திலிருந்து கந்தக்காடு தனிமைப்படுத்த முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்து மார்ச் 24ம் திகதி தனது வீட்டுக்கு திரும்பி உள்ளார்.
வீடு திரும்பிய 10 நாட்களின் பின்னர் வயிற்று வலி மற்றும் பிற அறிகுறிகளினால் நாகொட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
உணவு பொருட்களை பரிசோதிக்க சர்வதேச தொழில்நுட்பம்!
அரச அதிகாரிக்கு எதிராக வழக்கு தொடராத வகையில் புதிய சட்டம் - மகிந்த ராஜபக்ஷ!
அத்தியாவசிய சேவைகள் பிரகடனம் தொடர்பில் ஜனாதிபதியின் பதில் செயலாளர் சாந்தனி விஜயவர்தனவின் கையொப்பத்து...
|
|