220 ஆசிரியர்கள் மட்டுமே கடமைக்குச் சமுகமளிப்பு :வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் தகவல்!

Thursday, October 20th, 2016

வடக்கு மாகாணத்துக்கு நியமிக்கப்பட்ட 241 ஆசிரியர்களில் இதுவரை 220 ஆசிரியர்கள் மட்டுமே கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர். இவ்வாறு வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன் தெரிவித்துள்ளார்.

கல்வியல் கல்லூரிகளில் பயிற்சியை நிறைவு செய்து வெளியேறிய மாணவர்களில் 241 ஆசிரியர்கள் வடக்குக்கு நியமிக்கப்பட்டனர். இதில் 220 பேர் மட்டுமே நேற்றுவரை கடமையை பொறுப்பேற்றுள்ளனர்.

ஏனைய 21பேரில் பிற மாகாணங்களான ஊவா, சப்ரகமுவ மாகாணங்களைச் சேர்ந்த சிங்கள பாடசாலை ஆசிரியர்கள் தமது சொந்த மாகாணங்களுக்கு மாற்றம் கோரினார். அவர்களில் 16 பேரைக் கொழும்பு கல்வி அமைச்சு மீண்டும் சொந்த மாகாணங்களுக்கு விடுத்துள்ளது. ஏனைய 4 பேர் இதுவரை கடமைகளை பொறுப்பேற்கவில்லை. இதே போன்று வடக்கு மாகாணத்தை சேர்ந்த 6 பேருக்கு ஏனைய மாகாணத்தில் நியமனம் வழங்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டு அவர்கள் வடக்குக்கு விடுவிக்கப்பட்டுள்ளனர். இருப்பினம் எமது மாகாணத்தில் பணியேற்றுள்ள 220 ஆசிரியர்களில் மேலும் சில கிழக்கு மாகாண ஆசிரியர்களும் உள்ளனர் – என்றார்.

i3

Related posts: