கடந்தகால அனுபவங்களை பாடமாக கொண்டு இனிவருங் காலத்தை வெற்றிகொள்வோம் – ஈ.பி.டி.பியின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் தவநாதன்!

Tuesday, October 11th, 2016

 

கடந்த கால கசப்பான அனுபவங்களின் பாடங்களைக் கொண்டும் தவறான அரசியல் தலைமைகளின் வழிநடத்தல்களால் ஏற்பட்ட அவலத்தை கருத்தில் கொண்டும் இனிவருங் காலத்தை வெற்றிகொள்ளும் வகையில் நாம் வெளிப்படையாக செயலாற்ற ஒன்றுபட வேண்டும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வடக்கு மாகாணசபை உறுப்பினரும் கட்சியின் கிளிநொச்சி மாவட் நிர்வாக செயலாளருமான வை. தவநாதன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் நடைபெற்ற கட்சியின் செயற்பாட்டாளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

ஈழமக்கள் ஜனநாயக கட்சி தமிழ் மக்களுக்கான உரிமைகளையும் அவர்களுக்கான நிரந்தரமான தீர்வகளையும் பெற்றுக்கொள்ள பல்வேறுபட்ட கடுமையான சவால்களையும் கசப்பான அனுபவங்களையும் அதனூடான துயரங்களையும் சுமந்து வந்தவர்கள். அந்தவகையில் உங்களது வாழ்வியல் போராட்டங்களும் அதன் எதிர்பார்ப்புக்களையும் நாம் நன்கறிந்துகொண்டுள்ளோம்.

SAM_7919

தமிழ் மக்களது அனைத்து அர்ப்பணிப்புகளுக்கும் தீர்வாக கிடைத்த வடக்கு மாகாணசபையை வெற்றிகொண்டு அமைந்தது தமிழர் அரசு என மார்தட்டிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்களின் அழிவுகளில் ஏறினின்று வியாபாரத்தை மட்டுமன்றி தமது சுயலாபத்தையும் செய்து வரகின்றனரே தவிர இதுவரை மக்களுக்கு எதுவும் செய்திருக்கவில்லை என்பதுடன் கடந்த காலத்தில் டக்ளஸ் தேவானந்தா செய்துவந்த சேவைகளையும் முடக்கி தமிழ் மக்களை நிர்க்கதியாக்கியுள்ளனர் என்பதுதான் உண்மை.

யுத்தத்தினால் அழிந்துபோன எமது பகுதியை முழுமையாக கட்டியெழுப்ப நாம் அனைவரும் ஒன்றிணைந்து உழைக்கவேண்டியது காலத்தின் கட்டாயமாகும். அதற்காக அயராது உழைக்கவேண்டிய களமாக இருப்பது வடக்கு மாகாணசபைதான். ஆனால் அது இன்று செயற்றிறன் அற்றவர்களது சுயநலப்பிடிக்குள் சிக்கண்டு சின்னாபின்னமாக்கப்பட்டு கொண்டிருக்கின்றது வேதனையளிக்கின்றது.

SAM_7916

இங்கு கடந்த மூன்று வருடங்களுக்குள் முந்நூறுக்கும் மேற்பட்ட பிரேரணைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. அனைத்தும் மக்கள் நலன் சாராத வெறும் வெற்றுப் பிரேரணைகள் தான். இந்த பிரேரணைகளை ஆளும் தரப்பே கொண்டுவந்து அவர்களே தமக்குள் முரண்பட்டு விவாதிப்பது மட்டும்தான் இன்றுவரை நடைபெறும் நிகழ்வாக உள்ளது.

எதிர்க்கட்சியினர் நாகரிகமா நடந்தகொள்ளும் வடக்கு மாகாணசபையில் அநாகரிகமற்ற வர்களாக ஆழும் தரப்பினர் இருந்துகொண்டு தமிழ் மக்களுக்கு கிடைக்கவேண்டியவற்றை தடுத்து நிறுத்திக்கொண்டிருக்கின்றனர்.

எமது வழிகாட்டியான டக்ளஸ் தேவானந்தா என்றும் நேர்மையான பாதையைத்தான் எமக்கு காட்டி வருகின்றார். அதன் காரணமாக அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்ட இதர தமிழ் அரசியல் தரப்பினர் எம்மீது தமது அரசியல் காழ்ப்புணர்ச்சிகளை வெளிக்காட்டி வருகின்றனர். இதன் விளைவுகள் தான் தமிழ் மக்கள் மீட்சி பெறாது இன்றுவரை அவல வாழ்வு வாழ்வதற்கு காரணமாக உள்ளது. இதை மாற்றியமைப்பதற்கு எதிர்காலங்களில் மக்களாகிய நீங்கள் சரியானதொரு நிலைப்பாட்டை எடுப்பதனூடாகவுமே இது சாத்தியமாகும்  – என்றார்.

Related posts: