21 ஆவது திருத்தத்தின் சில சரத்துக்களை நிறைவேற்ற மூன்றில் இரணை்டு பெரும்பான்மையும், பொதுசன வாக்கெடுப்பும் அவசியம் – உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் தெரிவிப்பு!
Tuesday, June 21st, 2022
ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்ட அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்தின் சில சரத்துக்களை நிறைவேற்ற மூன்றில் இரணை்டு பெரும்பான்மையும், பொதுசன வாக்கெடுப்பும் அவசியம் உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்..
உயர் நீதிமன்றத்தின் குறித்த தீர்மானத்தை இன்றைய நாடாளுமன்ற அமர்வில் அறிவிக்கும் போதே சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதனை தெரிவித்துள்ளார்.
முன்வைக்கப்பட்டுள்ள திருத்தத்தில் பல சரத்துகள் அரசியலமைப்பிற்கு முரணானவையாக காணப்படுவதால் அவற்றை நிறைவேற்ற பொதுசன வாக்கெடுப்பு அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
00
Related posts:
கடலில் பிணமாக மீட்கப்பட்ட 1 வயது குழந்தை!
காணி மாவட்ட பதிவக சேவைகள் இரு தினங்கள் இடம்பெறாது
3 மாத குழந்தை வரலாற்றுச் சாதனை!
|
|
|


