2024 ஆம் ஆண்டின் நடுப்பகுயில் நாட்டில் கடுமையான வரட்சி ஏற்படும் – நிபுணர்கள் எச்சரிக்கை!
Thursday, December 14th, 2023
எதிர்வரும் பெப்ரவரி மற்றும் அடுத்த ஆண்டின் நடுப்பகுதிக்கு இடையில் கடுமையான வரட்சி ஏற்படும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
நாட்டின் உணவுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் மற்றும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் இன்னல்களை எதிர்கொள்ளும் தற்போதைய நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றம் மற்றும் இலங்கையின் உணவுப் பாதுகாப்பில் அதன் தாக்கம் குறித்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உயர்மட்ட விஞ்ஞான அமர்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு குடும்பங்களுக்கு உணவுப் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
எனினும் பொருளாதார நெருக்கடி மற்றும் காலநிலை மாற்றத்தால் இந்த நிலையை நிவர்த்தி செய்வது மிகவும் கடினமாக இருக்கும் என்றும் இந்த நிகழ்வில் கூறப்பட்டுள்ளது.
தற்போதைய பொருளாதார நெருக்கடியின் போது, உணவுப் பொருட்களின் விலை உயர்வால் நுண்ணூட்டச் சத்து இடைவெளி அதிகரித்து வருவதாகவும் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|
|


